Ads (728x90)

கற்பிட்டி - பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெண்களின் 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 57 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget