Ads (728x90)

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநாச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது, கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன.

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர்.

இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget