Ads (728x90)

நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களால் பல உயிர்கள் காவுகொண்ட நிலையில் இச்சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், அதன் பின்னணியையும், இச்சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்த காரணங்களையும் கண்டறிய விசேட குழு நியமிக்கப் பட்டுள்ளதாக என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சரவை செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஆகியோர் இந்த விசேட விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இக்குழு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு  உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட விசேட விசாரணைக் குழுவொன்று எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget