யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதன்போது வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இம்மூவரும் மழைக்காக கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றுள்ளனர். அவ்வேளையில் அங்கிருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கி இவர்களையும் தாக்கியுள்ளது. அதனையடுத்து அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment