இலங்கையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னர் அரசாங்கம் இலங்கையில் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தி யுள்ளது. இன்று முதல் இலங்கையில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதியின் தலைமையில் கூடிய வேளையில் இத்தீர்மானம் குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் இன்று முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
மேலும் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனாதிபதியினால் இன்றைய தினம் (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment