Ads (728x90)




யாழ். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான இளைஞன் ஒருவரை இலக்கு வைத்து அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

தான் மின்குமிழ் முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.

எனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை என வீட்டு உரிமையாளரால் சந்தேகிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் பல வாகனங்களில் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும், அயலவர்களும் அவதானித்துள்ளனர்.

நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget