நேற்று பிற்பகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான வான் ஒன்றை சோதனையிட்டபோது, அதில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டு அக்குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த வான் நேற்று முன்தினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்காக தீவிரவாதிகள் வந்த வாகனம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Post a Comment