இன்று காலை நாட்டில் இடம் பெற்ற அசம்பாவிதத்தை அடுத்து நாட்டு மக்கள் பதற்றமடையாது பொறுமை காக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் உண்மையற்ற, வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் அமைதி காக்கும் அதேவேளை, வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் என்றும் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு நிலைமையை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நடந்த சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் வருத்தமடையும் அதேவேளை, இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment