நெடுந்தீவில் கடுமையான வறட்சி காணப்படுகின்றது. அதனால் குதிரைகள் குடிநீர் இல்லாது தவித்து வந்த நிலையில், குதிரைகள் நீர் அருந்துவதற்கு என கட்டப்பட்டு உள்ள தொட்டிகளில் தினமும் வனஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீர் ஊற்றப்பட்டு வருகின்றது என நெடுந்தீவு பிரதேச செயலகம் தெரிவித்தது.
அதேவேளை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் சாராப்பிட்டியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்தும், தேசிய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தும் குடிநீரை பெற்று வழங்கி வருவதாக பிரதேச செயலகம் மேலும் தெரிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment