Ads (728x90)

இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. 

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் "மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் "ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்து வந்தடைந்தன. வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்சிகளில் கலந்து கொள்ள இலங்கைக்கு இவ்வாறு வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன.

இவ்விரண்டு போர்க்கப்பல்களும் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்து தமது கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளன.

இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு நட்புறவு வலுவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த கூட்டு கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget