தன்னைப்பற்றி அரசியல் மேடைகளில் வெவ்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
தான் தனது தந்தையின் பெயரை வைத்து அரசியல் நடாத்துவதாக சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த நாட்டில் எடுத்த பொறுப்புக்களை எல்லாம் ஊழல் மோசடி செய்து நாசமாக்கிய நபர்களே இவ்வாறு என்னைப் பற்றி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய வங்கியில் என்ன செய்தார். மனைவியை வைத்து இலஞ்சம் வாங்க துணைபோனார். நாட்டை ஒளி ஊட்டுவதற்கு கொடுத்த பொறுப்பை எடுத்தவுடன் நாடே இருளில் மூழ்கியது. இப்படியானவர்கள் தான் என்னைப் பற்றி கருத்துத் தெரிவிக்க முன்வந்துள்ளனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும், சிலர் செய்வது போன்று தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐ.தே.கட்சியை பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இல்லை எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment