தேசிய வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளர்களை மருத்துவ நிபுணர்கள் குறைந்தது 10 நிமிடங்கள் பார்வையிடவேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவர சுகாதார சேவைகள் மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாட்டை இந்த மாதம் தொடக்கம் நடைமுறைக்குக் கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் நேரக் கண்காணிப்பு இயந்திரம் மருத்துவ நிபுணரின் அறையில் பொருத்தப்படவுள்ளது எனவும் - தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு 7 நிமிடங்கள் போதுமானது என்று சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் யோசனையை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மருத்துவ நிபுணர்கள் குறைந்தது 10 நிமிடங்கள் பார்வையிடவேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
இப்புதிய நடைமுறையை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்றும் வகையில் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment