இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.
162 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
சென்னை அணி சார்பில் வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி தலா 5 ஓட்டத்துடனும், ரய்னா டக்கவுட் முறையிலும், ராயுடு 29 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 9 ஓட்டத்துடனும், ஜடேஜா 11 ஓட்டத்துடனும், பிராவோ 5 ஓட்டத்துடனும், தாகூர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், தோனி 84 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இதேவேளை இப்போட்டியில் சென்னை அணிக்கு இறுதி ஓவருக்கு 26 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க அந்த ஓவரை எதிர்கொண்ட தோனி ஒரு நான்கு ஓட்டம், மூன்று ஆறு ஓட்டங்களையும் பெற்றமை அதிரடி காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment