Ads (728x90)

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க நேற்றிரவு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிக்கை ஒன்றினூடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன செயற்படுவதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் நடமாடும் பகுதிகள் ஹோட்டல் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பட்சத்தில் சன நெரிசல் மிக்க பகுதிகளில் நடமாட வேண்டாம் அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளை கேட்டுகொண்டுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் அமெரிக்க அரசாங்க திணைக்களம் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரம் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளுமாறு அமெரிக்கா தனது அறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget