Ads (728x90)

வடக்கு மாகாண சபையை ஊடாக எதையும் செய்யாது கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவரல்ல என வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்த போது முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கற்பனை அரசியலை செய்து கொண்டு தாம் மாற்றுத் தலைமை என்கின்றார். அதிகாரத்தில் இருக்கும் போது ஆக்கபூர்வமாக எதையும் செய்யாதவர் கட்சி தொடக்கி மக்களுக்கு எதை செய்யப் போகின்றார்?

புதிய கட்சி, கூட்டணி என்ற பெயரில் அரசியல் இலாபம் காணவே தவிர மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், அதிகாரத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் அதனையே மாற்றுத் தலைமையாக வர விரும்புபவர்கள் முன்னெடுக்க வேண்டும். ஆனால் முன்னாள் முதல்வரோ அல்லது அவருடன் கூட்டு வைத்திருப்பவர்கள் கற்பனையில் வாழ்பவர்கள், கற்பனை அரசியலே செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget