Ads (728x90)

மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் உரும்பிராய் சந்தியில் இலங்கை வங்கிக்கு அருகாமையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புன்னாலைக்கட்டுவன் யோகேந்திரன் தமிழரசன் (வயது19) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்தவராவார்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞனும் முச்சக்கர வண்டிச் சாரதியும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget