Ads (728x90)

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. யாழ். மணத்தறை ஒழுங்கை சிவன் அம்மன் கோயிலடியில் இடி வீழ்ந்ததில்  இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தென்னை மரங்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget