Ads (728x90)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று இடைநீக்கம் செய்தது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் லீக் போட்டியில் பங்கேற்ற அவர்கள் இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அவர்கள் மீதான புகார் என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி இருவரும் உத்தரவிடப்பட்டுள்ளது. நுவான் ஜோய்சா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சூதாட்ட புகார் காரணமாக ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget