Ads (728x90)

முல்லைத்தீவு, முத்ததையன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேற்று மாலை மோதி விபத்திற்குள்ளானதில் காயமடைந்த 7 பேரும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget