Ads (728x90)

விடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடியவர்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.   

தமிழீழ விடுதலைப் புலிகளுடன், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளை ஒப்பிடமுடியாது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள்.

இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.   

Post a Comment

Recent News

Recent Posts Widget