Ads (728x90)

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 70,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 31,000க்கும் அதிகமானோரை பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால், எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதியில் மாணவர்களை இணைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடுவதாக பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget