Ads (728x90)

தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. மன்னிப்பின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சாக்குப்போக்குச் சொல்லி அரசியல் கைதிகளை விடுதலை விவகாரத்தை இழுத்தடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம், அரசிடமும் நாம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்குத் தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம்.

ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget