Ads (728x90)

12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறாவது லீக் போட்டி இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை நோட்டிங்கமில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது.

349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோசன் ரோய் 8 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 32 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 13 ஓட்டத்துடனும், இயன் மோர்கன் 9 ஓட்டத்துடனும், ரூட் 107 ஓட்டத்துடனும், பட்லர் 103 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 19 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டத்துடனும், ஜோப்ர ஆர்ச்சர்  ஒரு ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் மார்க்வூட் 10 ஓட்டத்துடனும், அடில் ரஷித் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 ஷெடப் கான், மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஹபீஸ், மலிக் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget