நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.
289 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் விக்கெட் 7 ஓட்டத்துக்குள் வீழ்ந்தது. 31 ஓட்டத்துக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது.
பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக நிகோலஷ் பூரண் மற்றும் ஷெய் ஹோப் கை கோர்த்து அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாடினர். மேற்கிந்தியத்தீவுகள் அணி 10 ஓவர்கள் நிறைவில் 54 ஓட்டத்தையும், 15 ஓவர்கள் நிறைவில் 78 ஓட்டத்தையும் பெற்றனர்.
40 ஓவர்களின் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றிருக்க, வெற்றிக்கு 60 பந்துகளில் 66 ஓட்டங்கள் என்ற நிலையிருந்தது. ஆடுகளத்திளத்தில் அணித் தலைவர் ஹோல்டர் 37 ஓட்டத்துடனும் பிரித்வெய்ட் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
இந்நிலையில் 43.4 ஆவது ஓவரில் ஹோல்டர் 50 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசியதுடன் அந்த ஓவரின் முடிவில் மேற்கிந்தியத்தீவுள் அணியும் 243 ஓட்டங்களை எடுத்தது.
எனினும் மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுது. இதனால் அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.
பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக்ஸ் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், சாம்பா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Post a Comment