Ads (728x90)

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அழுத்தங்களை கொடுத்தார்.

இது குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் முரண்பட்ட காரணத்தினால் என்னை பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இருந்து நீக்கினர் என,  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் நான் பங்குபற்றக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்ததாக எனக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவித்ததை அடுத்து நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. என்மீது இருந்த அவநம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கும்.

ஆனால் இறுதியாக ஒரு பாதுகாப்பு குழு கூட்டத்தில்   11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் அரச புலனாய்வு அதிகாரி நிஷாந்த டி சில்வா விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவர் அந்த விசாரணைகளை நிறுத்த வேண்டும் எனவும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும், ஜனாதிபதியும் தெரிவித்தனர்.

எனினும் எனக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இது குறித்து நான் காரணிகளை எழுப்பினேன். எனினும் என்னை கடமையை செய்ய பணித்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget