நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்கள் இரத்துச் செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நான்கு தசாப்த பூர்த்தியையொட்டிய நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு நெருக்கடிகளுக்கும், நானும், பிரதமரும் இழுபட்டு திரிவதற்கும் இந்த இரண்டு அரசியலமைப்பு திருத்தங்களுமே காரணமாகியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியையும் எதிர்காலத்தை ஸ்திரத்தன்மையுடன் கட்டியெழுப்பவும் இது பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Post a Comment