Ads (728x90)

பிக்பாஸ் சீசன்3 நேற்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும் கலைநிகழ்ச்சிக்கு பின்னும் கமலின் அறிமுகத்துடனும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் தொடங்கப்பட்டது.

தமிழில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 1, 2 இன் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 தொடங்கியுள்ளது. இதனையும் மற்ற இரண்டு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு,  இலங்கையை சேர்ந்த தொலைகாட்சி செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா, சாக்ஷி அகர்வால், நகைச்சுவை நடிகை மதுமிதா, சின்னத்திரை நடிகர் கவின், விளம்பர மாடலான  அபிராமி,
நடிகர் சரவணன், நடிகை வனிதா, இயக்குநர் சேரன், நடிகை ஷெரின்,
பரதநாட்டிய கலைஞர் மோகன் வைத்யா, இலங்கையைச் சேர்ந்த நடிகர் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவ் ஆகியோர் சென்றுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget