ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.
322 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
பங்களாதேஷ் அணியின் தமீம் இக்பால் 48 ஓட்டத்தையும், சவுமிய சர்கார் 29 ஓட்டத்தையும், பெற்று ஆட்டமிழந்ததுடன், சகிப் அல்ஹசன் 99 பந்துகளில் 16 நான்கு ஓட்டம் அடங்கலாக 124 ஓட்டத்துடனும், லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 8 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 94 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ரஸல், உஷேன் தோமஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment