CEB Care என்னும் பெயரில் இந்த கையடக்க செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. CEB Care கையடக்க செயலி இலங்கை மின்சார சபையால் நேற்று அமைச்சர் ரவிகருணாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் மின்வெட்டு, முறைப்பாடுகளை முன்வைத்தல், மின்கட்டணம் தொடர்பிலான சேவைகளை குறித்த செயலி ஊடாக இன்று முதல் வழங்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு இலகுவானதும், சிறந்த சேவையை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமென மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைக் கூகுள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பை பயன்படுத்தவும்.
https://play.google.com/store/apps/details?id=com.ceb.lk.cebcare
Post a Comment