ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டி அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையே நேற்றுமாலை லட்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இப்போட்டியில் இலங்கை 87 ஓட்டத்தினால் தோல்வி அடைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை குவித்தது.
335 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 45.5 ஓவர்கள் முடிவி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 87 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா அணியின் வெற்றிக்காக நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்திருந்த போதிலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக களமிறங்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் தோல்வியை பெற்றுக் கொடுத்தது.
திமுத், குசல் முதல் விக்கெட்டுக்காக 15.3 ஓவர்களில் 115 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. திமுத் கருணாரத்ன 97 ஓட்டத்தையும், குசல் பெரேரா 52 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 30 ஓட்டத்தையும் இலங்கை அணி சார்பில் அதிகமாக பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணிசார்பில் மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுக்களையும், கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment