ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ண தொடரின் 21 ஆவது போட்டி நேற்றைய தினம் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 35 ஓட்டங்களையும், நூர் அலி சாட்ரன் 32 ஓட்டத்தையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் இம்ரான் தாகீர் 4 விக்கெட்டுளையும், கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்ட்லி 2 விக்கெட்டுகளையும், ரபடா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
126 என்ற வெற்றி இலக்குடன் தென்னாபிரிக்க அணியின் சார்பில் அம்லா, டீகொக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி டீகொக் அரை சதத்தை பூர்த்தி செய்து 72 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திவந்த அம்லா 41 ஓட்டத்துடனும், பெலகுவோயோ 17 ஓட்டங்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment