பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்டு சிங்கள மக்கள் இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில் விகாரையில் சத்தியாக்கிரகம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் இந்த சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய பௌத்த பிக்குகள் இந்த பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இந்த சம்பவம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment