Ads (728x90)

இலங்கைக்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தியத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட நரேந்திர மோடி இரண்டாவது தடவையாகவும் நேற்றுமுன்தினம் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்ததோடு, அவரது அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.

ஹைதராபாத் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த நட்புடன் வரவேற்றார்.
சுமுக கலந்துரையாடலை தொடர்ந்து அரச தலைவர்கள் இருவரும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தனது அழைப்பையேற்று பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

மேலும் அண்மையில் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதல் குறித்து இந்தியப் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget