எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்களுள்ளன. இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை.
அதனால் எனக்கும் அவசரமில்லை. ஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை நானும் எனது தீர்மானம் குறித்து வெளியிட காத்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment