Ads (728x90)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ மேற்கொண்டு  இன்று  முற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முறைப்படி வரவேற்றுள்ளார். 

இவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதன்போது குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பத்து நாட்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரண்டாவது தடவையாக சந்தித்துள்ளேன் என்று தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதம் பொது அச்சுறுத்தல் என்பதால் கூட்டாகவும் ஒன்றிணைந்தும் அதில் கவனம் செலுத்தவேண்டிய தேவையை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் இலங்கையின் சிறந்த எதிர்காலத்திற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாலைதீவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு திரும்பும் வழியில்  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget