இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களை குவித்தது.
387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதரடியாக துடுப்பெடுத்தாடிய சகிப் அல்ஹசன் 119 பந்துகளில் 12 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 121 ஓட்டத்தையும், முஷ்பிகுர் ரஹிம் 44 ஓட்டத்தையும், மாமதுல்ல 28 ஓட்டத்தையும், ஹுசேன் 26 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணிசார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜேப்ர ஆச்சர் தலா 3 விக்கெட்டுக்களையும், மார்க்வூட் 2 விக்கெட்டுக்களையும், பிளாங்கட் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Post a Comment