Ads (728x90)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும், தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. சஹ்ரான் காத்தான்குடியை தனது கைக்குள் வைத்திருந்தார். அதுமட்டுமல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும், சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன எனவும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார்.

தவ்ஹித் ஜமா அத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர் எனவும் விசேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு சாட்சியமளிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மத் அசாத் சாலி இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget