Ads (728x90)

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடியும்வரை அமைச்சு பொறுப்புகளை ஏற்க மாட்டோமென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாயக்க தேரர்களிடம் இன்று கண்டியில் நடைபெற்ற சந்திப்பில்  தெரிவித்துள்ளனர்.

இங்கு பேசிய ரிசார்ட் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளார். அப்போது பதிலளித்துள்ள தேரர்மார் குற்றம்சாட்டப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று செயற்படுமாறு கேட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதால் விசாரணைகள் முடிந்து நியாயமான ஒரு தீர்ப்பு கிடைக்கும்வரை எந்த பதவிகளையும் ஏற்கப்போவதில்லையென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget