Ads (728x90)

ஒருவர் பிறப்பின் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மாத்தளை நகரசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு 10 இற்கும் அதிகமான பெயர்களில் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும். இதற்கு கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்களே பொறுப்புக்கூற வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கம் பிறப்புச்சான்றிதழுடன் இணைக்கப்படும். இதற்கான வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget