தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை குவித்தது.
331 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை பெற்று 21 ஓட்டத்தினால் தோல்வி பெற்றது.
தென்னாபிரிக்க அணிசார்பில் டீகொக் 23 ஓட்டத்தையும், மக்ரம் 43 ஓட்டத்தையும், டூப்பிளஸ்ஸி 62 ஓட்டத்தையும், டேவிட் மில்லர் 38 ஓட்டத்தையும், வேன்டெர் டஸன் 41 ஓட்டத்தையும், ஆண்டில் பெஹல்குவே 8 ஓட்டத்தையும், கிறிஸ் மோரிஸ் 10 ஓட்டத்தையும், தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த டூமினி 45 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் ரபாடா 13 ஓட்டத்துடனும், இம்ரான் தாகீர் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணிசார்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டினையும் மெஹமட் சைஃபுடின் 2 விக்கெட்டினையும், மெய்டி ஹசான், சஹிப் அல்ஹசன் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Post a Comment