Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில்  பாரிய  எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில்  மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு நெருக்கடி  நேரங்களில் தேசிய வளங்களை பிற  நாடுகளுக்கு விற்றார். அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னெடுக்கின்றார்கள். இரண்டு ஆட்சியாளர்களிடமும் எவ்வித வேறுப்பாடும் கிடையாது.

கடந்த மாதம் இந்தியாவில்  மக்களவை தேர்தல் இடம்பெற்றது. தேர்தல் பெறுபேறு வெளியாகும் மட்டும் இந்தியாவில் அரசாங்கம் ஒன்று கிடையாது. ஆனால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மேடை அபிவிருத்தி தொடர்பிலான  ஒப்பந்தம் மே 28 ஆம் திகதி    இரு நாடுகளுக்கிடையில் கைசாத்திடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் அரசாங்கம் ஒன்று  இல்லாத பட்சத்தில் பிறிதொரு  நாடு முக்கிய  ஒப்பந்தம் செய்துக் கொள்வது சட்டத்திற்கும், ஜனநாயக கொள்கைகளுக்கும்  முரணானது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில்  பாரிய  எதிர் விளைவுகளை நாட்டுக்கு ஏற்படுத்தும் என்பதை  உறுதியாக குறிப்பிட முடியும் என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget