Ads (728x90)

அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா தொழிற்துறையின் எதிர்காலம் தொடர்பில் எதிர்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு இத்துறையை மேம்படுத்துவதற்காக நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக அந்த சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலா தொழிற்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளுக்கான நிவாரணத்தை வழங்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு இத்துறைக்காக முன்னர் வழங்கப்பட்ட நிவாரணத்தை தொடர்ந்தும் விரிவுபடுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைவாக சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் நபர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கடன் திட்டத்திற்காக 2020 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நிவாரண காலமொன்றை வழங்குதல் மற்றும் அதற்கான கடன் பாதுகாப்பு நிதியில் உள்ளடக்கப்படுவதை விரிவுபடுத்தல், பஸ் உரிமையாளர்களுக்காக 2019ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் திகதி வரையில் 2மாதத்திற்கு கடன்களுக்காக நிவாரண கால அவகாசம் வழங்குதல், இசைக்குழு சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் நபர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட குழு கடன் திட்ட முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சுற்றுலா தொழிற்துறை மற்றும் தொடர்புபட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரண உதவியை வழங்குவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ´சஞ்சாரக பொட்டோ´ என்ற நிவாரண கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget