Ads (728x90)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிழக்கு மாகாண மாணவர் பேரவை, தற்போது கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி மும்மதங்களின் மதத்தலைவர்களும் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாகவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget