அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment