Ads (728x90)

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன நேற்று முற்பகல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இம்மனுவை எதிர்வரும் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் ஒரு வாரம் நிறைவு பெறும் வரை எந்தவொரு குற்றவாளிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.

46 வருடங்களாக அமுலில் இல்லாத மரண தண்டனையை அவசரமாக அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு காணப்படக்கூடிய அதிகாரம் தொடர்பில் அடிப்படை எதிர்ப்பு மனுவை சமர்ப்பிப்பதாக அரச பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரியன் பிள்ளே மன்றுக்கு அறிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget