ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.
233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஒட்டத்தை மாத்திரம் பெற்று 20 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்தாலும், பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்தனர்.
குறிப்பாக லசித் மலிங்க 10 ஓவர் பந்து வீச்சை மேற்கொண்டு 43 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுக்களையும், இசுறு உதான 8 ஓவர் பந்து வீச்சை மேற்கொண்டு 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 8 ஓவர் பந்து வீசி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் 10 ஓவர் பந்து வீசி 38 ஓட்டங்களை கொடுது்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment