ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணி பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளன. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்தே ரயில்வே தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
சம்பளம், கொடுப்பனவு, சலுகைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பல பல பணிகளுக்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment