Ads (728x90)

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி இந்திய அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 36 ஓட்டத்தனால் தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சாஹல் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget