Ads (728x90)

இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கே உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அனைத்து அரசியலமைப்புகளும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொடுக்கக் கூடிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதையும்அவர் மோடியிடம் அழுத்தமாகத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு புதுடில்லிக்கு வருமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget