இராணுவ வாகனம் தொடருந்துப் பாதையைக் கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. புகையிரதம் வருவதை முறையாக அவதானிக்காமையே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வாகன சிதைவுகளுக்குள் சிக்கியிருந்தவா்களை மீட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த 4 இராணுவத்தினரை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா்.

Post a Comment